அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்
— திருவள்ளுவர், திருக்குறள் 611
VV ka Vichar:
இது செய்வதற்கு அரியது, கடினமானது என்று சோர்ந்து மனம் தளரக் கூடாது. விடாமுயற்சி செய்தால் அந்த முயற்சியே பெருமையையும் வெற்றியையும் தரும். கடினம் என்று பின்வாங்காமல் முனைந்து செயல்படுவதே சாதிப்பவரின் குணம்.
